மருத்துவர்களின் அலட்சியத்தால் கருக்கலைப்பின் போது பெண் உயிரிழப்பு..?

0 290

மருத்துவர்களின் அலட்சியத்தால் கருக்கலைப்பின் போது பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மஞ்சுவிடுதி கிராமத்தைச் சேர்ந்த கலைமணிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக கருத்தரித்த அவர் சட்டவிரோதமாக பாலினத்தை அறிந்த போது அதுவும் பெண் குழந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே, வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் கணவரின் ஒப்புதலோடு 5 மாத கருவை அழிக்க முற்பட்ட போது கலைமணி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments