நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு, உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம் - பிரதமர் மோடி

0 678


டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

3ஆவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள பிரதமர் தேசியக்கொடியேற்றினார்

11ஆவது ஆண்டாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார் பிரதமர்

மழைக்கு மத்தியில் தேசியக்கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடி மீது மலர்கள் தூவி மரியாதை

செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் உரை

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - பிரதமர்

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு, உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம் - பிரதமர்

நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் பலர் உழைத்து வருகின்றனர் - பிரதமர்

நாட்டுக்காக உயிர் நீத்த தீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளிது - பிரதமர்

"பேரிடர்களில் இருந்து இந்தியா தொடர்ந்து மீள்கிறது"

கடந்த சில ஆண்டுகளாக பேரிடர்களால் துயரை எதிர்கொண்டாலும், அதிலிருந்து தொடர்ந்து மீண்டு வருகிறோம் - பிரதமர்

ராணுவ வீரர்கள், விவசாயிகள், சக்தியாக விளங்கும் பெண்கள் ஆகியோருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் - பிரதமர்

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை நினைவில் இருத்தி அனைவரும் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்த வேண்டும்

பேரிடர்களில் குடும்பங்களை, உறவுகளை இழந்தவர்களுக்கு தேசம் துணை நிற்கிறது - பிரதமர்

140 கோடி இந்தியர்களும் எனது குடும்பம்; அவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்

நாட்டின் பாதுகாப்பிற்காக, எல்லையிலும், பிற இடங்களிலும், அல்லும் பகலும் அயராது ராணுவத்தினர் பணியாற்றுகின்றனர்

2047ஆம் ஆண்டு வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி, பாரதம் பயணித்து வருகிறது

ஆங்கிலேயே காலனியாதிக்கத்தின்போது அப்போது இருந்த 40 கோடி இந்தியர்களும் ஒருமித்து எதிர்த்து வென்று சுதந்திரம் பெற்றனர்

உலகின் மிகப்பெரிய பேரரசு என குறிப்பிடப்பட்ட பிரிட்டிஷாரை, நாட்டை விட்டு இந்தியர்கள் அகற்றினர்

40 கோடி இந்தியர்களால் சுதந்திரம் சாத்தியமானது என்றால், 140 கோடி பேரால் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவது சாத்தியம்

அடிமை மனநிலையில் இருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டிய நேரம் இது; புதிய இந்தியாவை நோக்கி பயணிப்போம்

2047ல் வளர்ந்த பாரதம் உருவாகும்போது, இந்திய ஊடகத்துறை, உலகளாவிய ஊடகத்துறையாக மாறியிருக்கும்

2047ஆம் ஆண்டு வளர்ந்த பாரதம் நிலைபெறும்போது, இந்தியா உலகின் முதன்மையான உற்பத்தி கேந்திரமாக மாறியிருக்கும்

உலகளவில் 3ஆவது பெரிய பொருளாதாரத்தை பாரதம் வெகு விரைவில் அடையும்

"நீதித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்"

நமது நீதித்துறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்; அதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்

நாட்டு மக்கள் அகண்ட பாரதத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் - பிரதமர்

டெல்லி செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை, 2.50 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - பிரதமர்

ஜல்ஜீவன் திட்டம் மூலம், குறுகிய காலத்தில் 15 கோடி குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது

"வளர்ந்த பாரதம் வெற்று முழக்கம் அல்ல"

2047ஆம் ஆண்டில் வளர்ந்த பாரதம் என்பது வெற்று முழக்கம் அல்ல; 140 கோடி இந்தியர்களின் கனவாகும்

உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தருமாறு நான் விடுத்த அழைப்பை அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுள்ளனர்

"உலக நாடுகள் இந்தியாவிடம் பாடம் கற்கின்றன"

உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதுகின்றன

நாட்டின் ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக், விமான தாக்குதல் நடத்தும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது

ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் வளர்ச்சிக்காக முயற்சி செய்யும்போது அதன் முடிவு என்பது மிகச்சிறப்பாக அமையும்

அனைத்துத் தரப்பு மக்களும் வளர்ச்சி அடையும் வகையில் ப்ளூ ப்ரிண்ட் உருவாக்கி திட்டங்களை வகுத்துள்ளோம்

"தேசமே உச்சம், தேசத்துக்கே முதன்மை"

தேசமே உச்சம், தேசத்துக்கே முதன்மை என்ற உறுதியை எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்

பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட மாற்றங்கள் அரசியலுக்கானது அல்ல; நாட்டின் முன்னேற்றத்திற்கானது

எங்களை வழி நடத்துவது அரசியல் அல்ல, தேசமே முதன்மை என்ற உறுதி தான் எங்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது

வங்கித் துறையில் நாம் மேற்கொண்ட சீர்திருத்தங்களால் இன்று வங்கித் துறை வலிமையடைந்து உள்ளது

குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர் வங்கித் துறை சீர் திருத்தங்களால் பலமடைந்து இருக்கின்றனர்

ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்புத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டமும், பிரத்யேக தயாரிப்புகளால் தனித்துவம் பெற்று வருகின்றன

"புதிய சீர்திருத்தங்களை வடிவமைத்து வருகிறோம்"

"சீர்திருத்தங்கள் அரசியலுக்காக அல்ல; நாட்டிற்கானது"

மேலும் சிறப்பான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிய சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் இந்தியாவை பார்க்கும் விதம் மாறியுள்ளது

புதிய உச்சங்களை எட்டுவதற்கான உத்வேகம் தேசத்தின் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது

"தற்போது நடப்பது இந்தியாவின் பொற்காலம்"

தற்போது நடப்பது இந்தியாவின் பொற்காலம், இந்த காலகட்டத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

"மேலும் 10 கோடி பெண்கள் சுய உதவிக்குழுக்களில் இணைப்பு"

9 லட்சம் கோடி ரூபாய் வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன

நாடு முழுவதும் கூடுதலாக 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இணைக்கப்பட்டு வருகின்றனர்

"தனியார் துறை பங்களிப்பு நமக்கு பெருமையே"

தனியார் துறையினர் செயற்கைக் கோள்களை ஏவுவது நமக்கு பெருமைக்குரிய விஷயம்

"யுக்தியும், திட்டமும் சரியாக இருந்தால் இலக்கை எட்டலாம்"

யுக்தியும் திட்டமும் சரியாக இருந்தால் மக்கள் விருப்பப்படும் விஷயங்களை எட்டிப் பிடிக்க முடியும்


"வளர்ந்த நாடானால் அரசின் உதவிக்கான தேவை குறையும்"

2047-இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் போது சாமான்ய மக்களுக்கு அரசின் உதவிக்கான தேவை குறையும்

சாமான்ய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது

வட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியின் புதிய உச்சத்தை எட்டி வருகிறோம்

"வளர்ந்த பாரதத்தில் அரசின் தலையீடு குறைந்திடும்"

வளர்ச்சியடைந்த பாரதத்தில் அரசின் நிர்வாகம் அதிகபட்சமாகவும் அரசின் தலையீடு குறைவாகவும் இருக்கும்

"விரைவான நீதிக்கு புதிய கிரிமினல் சட்டங்கள்"

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் வகையில் புதிய கிரிமினல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன

தேசத்தை பின்னோக்கி இழுக்கும் பழைய சட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன

"இளைஞர்களின் ஆலோசனைகளை வரவேற்கிறோம்"

கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை எப்படி மேற்கொள்வது என்பதை இளைஞர்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்

"ஒவ்வொரு ஊராட்சிக்கும் 2 மாற்றம் வேண்டும்"

ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 2 மாற்றங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்

"உலக வளர்ச்சிக்கு இந்தியா பங்களித்து வருகிறது"

உலகத்தின் வளர்ச்சிக்கு தற்காலத்தில் இந்தியா அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது - பிரதமர்

"நாடு வளர்ச்சியடைய ஒன்றுபடுவோம்"

வளர்ச்சியை விரைவுபடுத்த சாதிகளைக் கடந்து மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

நாடு முழுவதும் சாதி, மதங்களைக் கடந்து மூவர்ணக் கொடி இன்று பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது

"அனைத்து இடங்களிலும் பள்ளி, கல்லூரிகள்"

நாட்டில் அணுக முடியாத இடங்களிலும் கூட பள்ளிகளை, கல்லூரிகளை துவங்க வேண்டும்

"தரமான உயர்கல்வியை சாத்தியப்படுத்துவோம்"

"வெளிநாட்டு தரத்தில் இந்தியாவில் கல்வி"

மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்லாத அளவுக்கு சிறந்த தரத்திலான கல்வியை நம் தேசத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

"மொழிகள் திறமைக்கு தடையாகிவிடக்கூடாது"

வெவ்வேறு மொழிகள் இருப்பது நம் நாட்டின் திறமைகளுக்கு தடையாக அமையக் கூடாது

ஆராய்ச்சிக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு

ரூ.1 லட்சம் கோடியை ஆய்வு மற்றும் புத்தாக்கங்களுக்காக வழங்க இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

திறன் மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் முன்னுரிமை வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

"2047ல் இந்தியர்கள் ஆரோக்கியமானவர்களாக இருப்பர்"

2047-இல் வளர்ந்த நாடாகும் போது இந்திய மக்கள் ஆரோக்கியமானவர்களாகவும் இருக்க வேண்டும்

"மருத்துவ படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்கள்"

அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்வியிடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

மருத்துவத் துறையில் 75 ஆயிரம் புதிய கல்வியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்

"ஆர்கானிக் உணவுக்கான தேவை அதிகரிப்பு"

ஆர்கானிக் உணவுகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்துள்ள நிலையில், அந்த தேவையை இந்தியா நிறைவேற்ற வேண்டும்

வரும் ஆண்டுகளில் ஆர்கானிக் உணவுகளின் மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும்

உலகின் ஆர்கானிக் பழக் கூடையாக இந்தியா உருவெடுக்க வேண்டும்


"பெண்களை முன்னிலைப்படுத்தி வளர்ச்சி நடவடிக்கை"

கடந்த 10 ஆண்டுகளில் பெண்களை முன்னிலைப்படுத்திய வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

"பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை"

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும்

"பாதுகாப்புப்படையினரின் துணிச்சலுக்கு நன்றி"

பாதுகாப்புப் படையினரின் துணிச்சலான செயல்பாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பில் இந்தியா தனது தேவையை தானே நிறைவு செய்து கொள்ளும் நிலையை எட்டும்

"6-ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வர நடவடிக்கை"

6-ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வோம்

உலகத்தின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்

"சர்வதேச முதலீட்டாளர்களை ஊக்குவிப்போம்"

சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் துவக்க ஆர்வத்துடன் உள்ளனர்

சர்வதேச முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

"2030-இல் 500 கிகா வாட் மின் உற்பத்தியை எட்டுவோம்"

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ள நாம் வெறும் வார்த்தைகளால் இல்லாமல், செயல்களால் நடவடிக்கைகளை துவக்கியுள்ளோம்

2030-இல் 500 கிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி என்ற இலக்கை இந்தியா எட்டும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments