கண்ணை உருட்டி...நாக்கில் சூடம் ஏற்றி பெட்ரோல் ஊற்றி.. கூச்சலிட்டும் பயனில்லை நீர் நிலையை ஆக்கிரமித்த கோயில் இடிப்பு..! வேலி அமைக்க முயன்றதால் மொத்தமா போச்சு

0 804

மதுரை திருமங்கலம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்துக்கட்டப்பட்ட கோவிலை இடிக்க  நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை கட்டியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து  நாக்கில் சூடம் ஏற்றி சாமி ஆடியும், பெட்ரோல் ஊற்றிக் கொண்டும்  போராட்டம் நடத்தினர். அவர்களை அப்புறப்படுத்திய போலீசார் கோவிலை பொக்லைனை வைத்து இடித்தனர்

கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் செய்த ஆவேச போராட்ட காட்சிகள் தான் இவை..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வேப்பங்குளம் கிராமத்தில் இருந்த மருதூர் அம்மன் கோவிலை சுற்றி கோவில் நிர்வாகிகள் வேலி அமைக்க முற்பட்டனர். அப்போது கோவில் அருகே பட்டா நிலத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் பிரச்சனை முற்றிய நிலையில், கோயில் அமைந்திருப்பது நீர் நிலைப்பகுதி என்றும், அதனை சுற்றி வேலி அமைப்பதால் தாங்கள் பயன்படுத்தும் வழி அடைக்கப்படும் என்றும், பட்டா நிலத்தில் வசித்து வரும் லிங்கசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அந்தக்கோயில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதால் , கோவிலையும், நீர் பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவிலை அகற்றாததால் லிங்கசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். கோவிலை இடிக்க மீண்டும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சமாதானக்கூட்டமும் பலனலிக்கவில்லை. இதை அடுத்து புதன்கிழமை காலை கோவிலை இடிப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் திருமங்கலம் டி.எஸ்.பி அருள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

கோவில் நிர்வாகிகள் தரப்பு கிராம மக்கள் கோவிலை இடிக்க விடாமல் தடுத்தனர். சாமி ஆடியும் எச்சரித்தனர்

2 மாணவர்கள் , உள்ளிட்ட 4 பேர் கோவில் மீது ஏரி பெட்ரோல் ஊற்றி போலீசாரை அச்சுறுத்தினர். அவர்களை மீட்டு போலீசார் கீழே கொண்டு வந்தனர்

கோவிலுக்குள் பூட்டிக் கொண்டு சிலர் வெளியேவர மறுத்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கோவில் இடிக்கப்பட்டது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments