நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கிளாம்பாக்கத்தில் தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்குச் செல்ல குவிந்த பயணிகள்
நாளைய தினம் 78வது சுதந்திர தினம் மறுநாள் வரலட்சுமி நோம்பு அதனையடுத்து சனி ஞாயிறு என வார விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்ததால் கூட்டம் அலை மோதியது.
பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் போதுமான பேருந்துகள் இல்லாததால், பயணிகள் பேருந்தை கண்டவுன் ஆபத்தான முறையில் பேருந்தின் பின்னால் பேருந்தில் இடம் பிடிக்க ஓடி ஜன்னல் வழியாக தங்களது பைகளை தூக்கி வீசி முண்டியடித்தனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கொண்டாடும் வேளையில் சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்து வசதி கூட இல்லாமல் அவதியுறுவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
Comments