அதிமுக எம்.எல்.ஏ வீட்டுக்குள் அரைமணி நேரம் பேய் போல அறைக்குள் உலவிய மர்ம மனிதன்..! அந்தமான் சென்றவர்கள் அதிர்ச்சி

0 740

சென்னையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதன், 4 மாடிகளுக்கும் சென்று ஒவ்வொரு அறைகளையும் நோட்டமிட்ட நிலையில் அவனை போலீசார் தேடி வருகின்றனர்

அதிமுக எம்.எல்.ஏவின் வீட்டு வாசல் திறந்து கிடந்ததால் அழையா விருந்தாளியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதன் இவர் தான்..!

சென்னை அசோக்நகர் பகுதியில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதில் அவரது மகன் இசக்கித்துரை வசித்து வருகிறார். கடந்த 11 ந்தேதி குடும்பத்தினர் அனைவரும் அந்தமானுக்கு சுற்றுலா சென்று இருந்த நிலையில் 12ந்தேதி காவலாளி மட்டும் வீட்டின் காவலுக்கு இருந்தார். உணவு வாங்க வெளியே சென்ற நிலையில் எம்எல்ஏ வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.

ஈதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் , திரும்பி வந்த காவலாளியிடம் தெரிவிக்க பதறிய அவர் உள்ளே சென்று அந்த நபரை மடக்கிப்பிடித்தார். நாளைய மனிதன் படத்தில் வரும் கேரக்டர் போல வீட்டுக்குள் சுற்றிவந்த அவரை சோதனையிட்டு வெளியே அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து பணிப்பெண் எம்எல்ஏவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது மகன் இசக்கித்துரை அந்தமானில் இருந்தபடியே செல்போன் மூலமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். வீட்டுக்குள் நுழைந்த அந்த ஆசாமி சுமார் 1/2 மணி நேரத்திற்கு மேலாக வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிதுரை இது குறித்து ஸெல்போன் மூலமாக கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டின் மெயின் வாசலை திறந்து போட்டு விட்டு காவலாளி வெளியே சென்றதால் அந்த மர்ம நபர் நுழைந்ததாக தெரிவித்த போலீசார், வீட்டு பணியாட்கள் அந்த நபரை எச்சரித்து வெளியே அனுப்பிய நிலையில் , வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர் யார் ? என்பதனை கண்டறிய விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments