மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை.. 6 பேர் கைது.. முக்கியக் குற்றவாளிக்கு மாவுக்கட்டு..!

0 319

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளியை மதுபோதையில் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11 ஆம் தேதி சரித்திர பதிவேடு குற்றவாளியான லோகேஷ் தனது நண்பர்களுடன் மது அருந்தியபோது பிரகாஷ் என்பவருடன் மோதல் ஏற்பட்டது  லோகேஷ் அடித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ், லோகேஷ்-யை பின் தொடர்ந்து  தனது கூட்டாளிகளுடன் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் மொட்டை பிரகாஷ், மதன், பிரகாஷ்ராஜ், சுரேந்தர், தண்டாபாணி, கார்த்திக் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.இதில் முக்கியக் குற்றவாளியான மொட்டை பிரகாஷ் தப்பியோடும் போது கீழே விழுந்ததில் வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments