தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை.. லஞ்சம் வாங்கி பதுக்கிவைத்திருந்த ரூ.1.46 லட்சம் பணம் பறிமுதல்
திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி பதுக்கி வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 மணி நேரம் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி, அவரது ஓட்டுநர் பிரகாஷ், இடைத்தரகர் பரணி ஆகியோரிடத்தில் இருந்து பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மூவரையும் விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் வழங்கினர்.
Comments