100 நாள் வேலையை கெடுக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை - அமைச்சர் கே.என்.நேரு
திருவள்ளூர் நகராட்சியில் நிறுவப்பட்ட நாற்பது கிலோ மார்பளவிலான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நகர்பற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊராட்சி மக்களின் 100 நாள் வேலையை கெடுக்கும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை என்றும், எந்த ஊராட்சியை நகராட்சியில் இணைத்தாலும் மக்களின் அனுமதி பெற்றே இணைக்கப்படும் என்று கூறினார்.
Comments