சாலையை கடக்க முயன்ற 6 பேர் மீது மோதிய கார்... பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் விபத்து

0 368

சென்னை மீனம்பாக்கத்தில், சிக்னலில் நிறுத்த பிரேக்கை மிதிப்பதற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் வேகமெடுத்த கார், சாலையைக் கடக்க முயன்ற 4 மாணவிகள் உள்பட 6 பேர் மீது மோதியது.

அதில், மாணவிகள் 2 பேருக்கு காலிலும், தூய்மைப்பணியாளர்கள் 2 பேருக்கு கால் மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காரை ஓட்டி வந்ததாக தனியார் கல்லூரி ஒன்றில் எம்.சி.ஏ 2-ம் ஆண்டு படித்துக் கொண்டே வேலைபார்த்து வரும் பல்லாவரத்தைச் சேர்ந்த பாலமுருகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments