நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
திருவள்ளூர் மார்க்கெட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருவள்ளூர் மார்க்கெட் காய்கறிக் கடை ஒன்றில் கடந்த 9-ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனைவியைப் பிரிந்து வாழும் சுரேஷ் என்பவர், கணவனை இழந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து சுரேஷின் முதன் மனைவி பார்வதி, காய்கறிக் கடைக்குச் சென்று ராஜேஸ்வரி மீது பெட்ரோலை ஊற்றியதாகவும், அதில் இருந்து தப்பிக்க பின்னோக்கி சென்ற ராஜேஸ்வரி, சுரேஷின் தாயார் படத்துக்கு முன் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கில் இருந்த தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிகிறது.
சம்பவம் தொடர்பாக பார்வதி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
Comments