தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
வேளாங்கண்ணியில் வாடகைக்கு எடுத்த அறையை காலி செய்ய கூறிய விடுதி மேனேஜரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம்
வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில், வாடகை நேரம் முடிந்தும் தங்கியிருந்ததால் அறையை காலி செய்ய கூறிய மேலாளர் மற்றும் உதவியாளரை கத்தியால் வெட்டிய போதை ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சரண்ஜி ரெசிடென்சி விடுதியில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மனோஜ்குமார் உள்பட 4 பேர், வாடகை நேரம் முடிந்தும் அறையை காலி செய்யாமல், மது போதையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அறையை காலி செய்ய சொன்ன விடுதி மேனேஜர் மாதவன் மற்றும் உதவியாளர் செல்வராஜை, அந்த ஆசாமிகள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய நிலையில், பொதுமக்கள் விரட்டிச் சென்று 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், தப்பி ஓடிய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments