இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தல் - படகு மூலம் கடத்தி வந்த நபரை பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்த போலீசார்
இலங்கையிலிருந்து படகு மூலம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைக்கு கடத்தி வரப்பட்ட 4 கோடியே 56 லட்ச ரூபாய் மதிப்பிலான 6.6 கிலோ தங்கத்தை மதுரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலின் பேரில் மண்டபம், வேதாளை, களிமண்குண்டு, மரைக்காயர் பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் மறைந்திருந்து கண்காணித்தனர்.
தங்கக் கட்டிகளை படகு மூலம் கடத்தி வந்த நபர் காரில் மதுரை நோக்கி செல்வதாக கிடைத்த தகவலையடுத்து, பின் தொடர்ந்து சென்று திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே மடக்கிப் பிடித்தனர். தங்கத்தைக் கடத்தி வந்த கீழக்கரையைச் சேர்ந்த ஷேக் சதக், ஷாதிக் அலி ஆகியோரையும் கைது செய்தனர்.
Comments