தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
"டெய்லி" நிறுவன குளிர்பானம் அருந்தி சிறுமி உயிரிழந்த விவகாரம் - குளிர்பான ஆலையில் அதிகாரி ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே டெய்லி நிறுவன குளிர்பானம் அருந்தி 6 வயது சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் நாமக்கல் மாவட்ட தொழிற்சாலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
ராசிபுரம் அடுத்த ஏ.கே.சத்திரம் பகுதியில் டெய்லி ஃபிரஷ் குளிர்பான ஆலை அமைந்துள்ளது. சிறுமி குடித்த குளிர்பானம் கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்த உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு ஆய்வு மேற்கொண்டதாகக் கூறினார்.
Comments