சாலையில் விழுந்த மரத்தின் மீது பைக் மோதி இளைஞர் பலி.. உறவினர்கள் மறியல்..!

0 446

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கூட்ரோடு பகுதியில் சாலையில் விழுந்த மரத்தின் மீது பைக் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விண்ணமங்கலத்தைச் சேர்ந்த சிவா இன்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக தனது நண்பருடன் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த லாரி ஹெட்லைட் வெளிச்சத்தில் மரம் கண்ணுக்கு தெரியாததால் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரம் மீது மோதியதாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை பெய்த மழையால் மரம் முறிந்து விழுந்ததாகவும் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் அப்புறப்படுத்தவில்லை என்று கூறிய உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments