சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி

0 421

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கண்டெய்னர் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியதில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

சென்னையை அடுத்த காட்டாங்களத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த 7 மாணவர்கள், வாடகை காரில் சித்தூருக்கு சென்றுவிட்டு இரவில் சென்னைக்கு திரும்பியபோது, கட்டுப்பாடை இழந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது அதிவேகமாக மோதியதாக கூறப்படுகிறது.

5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவர்களது உடல்களை வாங்க பெற்றோர் கண்ணீருடன் காத்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments