வெளிமாநில நபரின் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி பணம் பறிப்பு.. இருவர் கைது ஒருவர் தலைமறைவு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பைக்கில் சென்ற வெளிமாநில நபர் மீது மற்றொரு பைக்கில் வந்து இடித்த ஒரு கும்பல், அவரை மிரட்டி பணம், நகை பறித்துச் சென்றுள்ளது.
கமல் வம்சி என்பவர் பைக்கில் சித்தூர் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே 3 பேராக ஒரு பைக்கில் வந்த கும்பல் அவர் மீது மோதியுள்ளது.
கமல் வம்சி வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு அவரை மிரட்டி, போன் பே மூலம் 10 ஆயிரம் ரூபாய் பணம், வாட்ச், அரை சவரன் மோதிரம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளது.
இது தொடர்பான புகாரில், சுரேஷ், பிரசாந்த் ஆகியோரை கைது செய்த போலீசார், ரோஹித் என்பவனைத் தேடி வருகின்றனர்.
Comments