ஆர்டர் செய்த தோசையும் ஊத்தப்பமும் கொடுக்காததால், சொமட்டோ நிறுவனத்துக்கு அபராதம்

0 443

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சொமட்டோ செயலியில் ஆர்டர் செய்த தோசையும் ஊத்தப்பமும் கொடுக்காததால், அந்நிறுவனத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனந்த் சேகர் என்பவர் தொடுத்த வழக்கில், உணவகத்துக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே இடைத்தரகர் போல் தாங்கள் செயல்படுவதாகவும் பார்சலுக்குள் இருக்கும் உணவு குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் சொமட்டோ நிறுவனம் வாதாடியது.

வழக்கில் ஹோட்டல் நிர்வாகத்தை ஒரு தரப்பாக சேர்த்திருக்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் வாதிட்டது.

இதனை ஏற்காத நுகர்வோர் நீதிமன்றம், வாடிக்கையாளரிடமிருந்து சேவை கட்டணம் வசூலிக்கும் சொமட்டோ நிறுவனம் உணவை சரிபார்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments