பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீட்டை அனுமதித்த உச்சநீதிமன்றம், கிரீமி லேயரை அமல்படுத்த பரிந்துரை

0 298

பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீட்டை அனுமதித்த உச்ச நீதிமன்றம், உயர்வருவாய் பெறுவோர் இடஒதுக்கீடு பலன் பெறுவதை தடுக்க கிரீமி லேயரை அமல்படுத்த அரசுக்கு பரிந்துரைத்தது.

இதையடுத்து, பாஜக உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 பட்டியலின எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். இடஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கன சட்டப்பிரிவு இல்லாததால் உச்சநீதிமன்ற ஆலோசனையை பரிசீலிக்க கூடாது என மனு அளித்தனர். பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டில் அரசியல் சட்டப்படி அரசு செயல்படும் என எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி உறுதியளித்ததாக, பின்னர் பேட்டியளித்த தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments