வீட்டின் ஜன்னலை உடைத்து கொள்ளையடித்த 3 பேர் .. 100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பிடித்த போலீசார்..!
வேலூர் அருகே பெருமுகை பகுதியில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களை, சுமார் 100 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக்கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டம், மேல்பாக்கத்தில் பிடித்ததாக சத்துவாச்சாரி போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கோகுல் என்பவர் தனது வீட்டிலிருந்து 20 சவரன் நகைகள் கொள்ளை போனதாக புகார் அளித்ததையடுத்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் டிவிஎஸ் எக்செல் வாகனத்தில் 3 பேர் அப்பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. அம்மிக் கல் கொத்தும் வேலை செய்யும் வேளாங்கண்ணி, செல்வா உள்ளிட்ட மூவர் தொழில் செய்வதற்கு பயன்படும் உளி, சுத்தியல், இரும்பு ராடு உள்ளிட்டவற்றை கொண்டு ஜன்னலை உடைத்து திருடியதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments