சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த பயணியிடம் 600 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல்..!
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமான பயணியிடம் இருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதே விமானத்தில் வந்த இன்னோரு பயணியின் பையில் இருந்து 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 90 ஆயிரம் எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments