புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்... கால்வாய் பகுதிகளில் தேடும் பணியில் போலீசார்
புதுச்சேரியில் பல மணி நேரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பைக்குடன் அடித்து செல்லப்பட்ட நபரை கால்வாய் பகுதிகளில் தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜீவானந்தபுரத்தை சேர்ந்த எலக்ட்ரிஷன் ஐயப்பன் என்பவர் வேலை முடிந்து வீடு திரும்பும்போது சாலையில் முழங்கால் அளவு ஓடிய வெள்ளத்தில் வாகனத்தை இயக்க முடியாமல் தள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் இழுத்துச்சென்ற தனது பைக்கை பிடிக்க முயன்றபோது ஐயப்பனும் அடித்து செல்லப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
Comments