ரயில்வேத் துறையில் ரூ.24,657 கோடி ரூபாய் செலவில் 8 புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 310

ரயில்வேத் துறையில் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஏழு மாநிலங்களில் உள்ள14 மாவட்டங்களில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் ஒடிசா, ஜார்க்கண்ட் , சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் இணைக்கப்படாத பகுதிகளை நாட்டின் ரயில்வே நெட்வொர்க்குடன் இத்திட்டங்கள் இணைக்கும் என்றும் ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களும் இத்திட்டங்களால் பயன்அடையும் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments