கன்னியாகுமரில் மண்ணெண்ணெய் கடத்தலுக்கு உதவிய காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

0 236

மண்ணெண்ணை கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக குமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் தாமஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில எல்லையாக விளங்கும் கொல்லங்கோடு வழியாக கேரளாவிற்கு ரேசன் அரிசி, மண்ணெண்ணை கடத்தப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க ரகசிய தனிப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அமைத்தார்.

அதில், ஒரு கடையின் அருகே இரவு நேரத்தில் கும்பல் ஒன்று கேன்களில் மண்ணெண்ணை இறக்கி வைப்பதும், சிறிது நேரத்திற்கு பிறகு அங்குச் சென்ற காவல் ஆய்வாளர் தாமஸ் அதனை பார்வையிடுவதும் தெரிய வந்தது.

பறிமுதல் செய்யாமல் விடப்பட்ட மண்ணெண்ணையை மற்றொரு கும்பல் வாகனத்தில் எடுத்துச் செல்லும் சி.சி.டிவி பதிவுகளை தனிப்படையினர் கைப்பற்றி எஸ்.பியிடம் அறிக்கையாக சமர்பித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments