கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை சீரழித்த இளைஞன் போக்சோவில் கைது

0 480

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீல்ஸ் வீடியோ எடுக்கலாம் எனக் கூறி 16 வயது சிறுமியை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டாகிராம் காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

காட்டாத்துறையைச் சேர்ந்த சிஜின் என்ற அந்த இளைஞன்,பெற்றோரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த அந்த சிறுமியை உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்கா மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அழுதுகொண்டே இருந்த சிறுமியை சிஜின் அங்கேயே விட்டுச் சென்ற நிலையில், உறவினர் வீட்டில் தஞ்சமடைந்த அவரை போலீசார் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments