வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

0 186

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆறுகாட்டுதுறை பகுதியை சேர்ந்த அன்பழகன், நாகராஜ் உள்ளிட்ட 5 மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையை சேர்ந்த 5 கடற்கொள்ளையர்கள் படகில் ஏறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் படகில் இருந்த ஜீ.பி.எஸ். கருவி , 20 கிலோ மீன், செல்போன் மற்றும் மீன்பிடி வலைகலையும் வெட்டி எடுத்துக்கொண்டு தப்பி சென்றதாக மீனவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments