நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - மக்களவையில் ராகுல் காந்தி வேண்டுகோள்
வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவின் விளைவாக ஏற்பட்ட பேரழிவு, வலி மற்றும் துன்பத்தை தன் கண்களால் பார்த்ததாக கூறியுள்ள அவர், ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பிழைத்து, அவரது தாய், தந்தை, சகோதரன், சகோதரி என பலரும் உயிரிழந்த நிகழ்வுகள் பல நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, மாநில அரசுகள், பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோரின் பணிகளையும் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகியவை அளித்த உதவிகளையும் பாராட்டுவதாக கூறியுள்ள ராகுல், இத்துயரத்தில் இறுதி பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments