வயநாட்டில் உலகத்தரமான புனரமைப்பு பணிகள் நடைபெறும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி
நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள வயநாட்டில் உலகத்தரமான புனரமைப்பு பணிகள் நடைபெறும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது புனரமைப்புத் திட்டம் நாட்டுக்கும் உலகிற்கும் முன்னுதாராணமாக இருக்கும் என்றார். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஊதியத்தின் ஒரு பகுதியை நிவாரணப் பணிகளுக்கு அளிக்க முன்வந்திருப்பதாகவும் இதுவரை 54 கோடி ரூபாய்க்கு நிதியுதவி பெறப்பட்டிருப்பதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆயிரத்து 174 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்த அவர், எந்தவித சந்தேகமும் எழாதவகையில் மீட்பு முயற்சிகள் முழுமையாக நடைபெற்றுவருவதாகக் குறிப்பிட்டார்
Comments