மதுரை மேலூர் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேகமாகச் சென்று கார் மோதிய விபத்தில் ம.தி.மு.க நிர்வாகிகள் 3 பேர் உயிரிழப்பு

0 300

மதுரை மேலூர் சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேகமாகச் சென்று கார் மோதிய விபத்தில், காரில் பயணித்த ம.தி.மு.க நிர்வாகிகள் மூவர் உயிரிழந்தனர்.

சென்னையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய மதிமுக மாநில நிர்வாகி பச்சைமுத்து, அவரது மனைவி வளர்மதி, கட்சி நிர்வாகிகள் புலிசேகர், பிரபாகரன் ஆகியோர் பயணித்த காரை அமிர்தராஜ் என்பவர் ஓட்டியுள்ளர்.

மேலூர் சுங்கச்சாவடியை நெருங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பச்சைமுத்து, அமிர்தராஜ் மற்றும் புலிசேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வளர்மதி, பிரபாகரன் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உரிய ஓய்வு எடுக்காமல், தூக்க கலக்கத்தில் அமிர்தராஜ் காரை ஓட்டியதாகவும், அதிவேகமாகச் சென்று மோதியதால், காரின் ஏர் பேக்குகள் விரிவடைந்தும் பலனளிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments