புவனகிரி அருகே அரசு பேருந்து லைட் இல்லாமல் இயக்கப்பட்டதால் சர்ச்சை... படம் பிடித்த செய்தியாளரை மிரட்டிய ஓட்டுநர்...
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஹெட் லைட் எரியாத நிலையில் இருட்டில் இயக்கப்பட்ட அரசு பேருந்தை படம் பிடித்த செய்தியாளரை பேருந்து ஓட்டுநர் மிரட்டியதால் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
வடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற பேருந்துக்குக்கு வழிகாட்டியாக இருசக்கர வாகனம் ஒன்று முன்னே சென்றது.
கொளக்குடி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறக்கப்பட்டபோது கீழே இறங்கி வந்த ஓட்டுநர், படம் பிடிக்கக் கூடாது என்று செய்தியாளரை மிரட்டினார்.
மிரட்டல் தொடர்பாக மருதூர் காவல் நிலையத்தில் செய்தியாளர் புகாரளித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Comments