நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
மேட்டூர் அணையின் 16 கண் மதகு அருகே மண் திட்டுகளில் சிக்கிய நாய்கள் மீட்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி...
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டபோது 16 கண் மதகு அருகே வெவ்வேறு மண் திட்டுகளில் ஐந்து நாய்கள் சிக்கிக்கொண்டதை அறிந்த மாவட்ட நிர்வாகம், நாய்களுக்கு ட்ரோன் மூலம் பிரியாணி மற்றும் பிஸ்கட் வழங்கியது.
தற்போது நீர் வரத்து குறைந்து வெளியேற்றமும் குறைக்கப்பட்டதால் நாய்களை மீட்க முயற்சி எடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் கால்வாயில் இறங்கி நாய்களை தேடியபோது அங்கு ஒரு நாய் கூட இல்லை. தண்ணீர் குறைந்ததால் நாய்கள் நீந்தி தப்பியிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
Comments