தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
நிலம் எடுப்பதில் தொய்வு, தண்ணீர் பற்றாக்குறையால் அத்திக்கடவு அவிநாசி திட்டம் தாமதம் - அமைச்சர் முத்துசாமி
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணம் குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோட்டில் பேட்டி அளித்த அவர், 6 பம்பிங் நிலையங்களில் முதல் மூன்று நீரேற்று நிலையங்களுக்கு இடையே நிலம் பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் பணிகள் நடைபெறாததே இதற்கு காரணம் என்றார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் முத்துசாமி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
Comments