சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவாயில் விபத்து.. கிரேன் உதவியுடன் சுவாமி சிலைகள் அகற்றம்..!
லாரி மோதியதால் சேதமடைந்த சமயபுரம் கோவிலின் நுழைவாயில் தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆலோசனைப்படி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது.
அங்கிருந்த விநாயகர், மாரியம்மன், முருகன் சிலைகள் ராட்சத கிரேன் உதவியுடன் வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. நெல்மூட்டை ஏற்றி வந்த கனரக லாரி மோதியதால் இடதுபுறத் தூண் சேதம் அடைந்து நுழைவாயிலில் விரிசல் ஏற்பட்டது.
Comments