நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
வாழப்பாடி அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை - கணவர் கட்டையால் அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கடந்த 21ஆம் தேதி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 20ஆம் தேதி அவரது கணவர் அந்த பெண்ணை கட்டையால் அடித்து துன்புறுத்திய செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது.
புதுகாலனிகாடு பகுதியை சேர்ந்த அஜய்குமார், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு உமா என்பவரை காதல் திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு 7 மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட நிலையில் மீட்கப்பட்ட உமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். 10 நாட்களுக்கு பிறகு செல்போன் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், ஆர்டிஓ விசாரணைக்கு பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.
Comments