என் கதையில எனக்கே தெரியாம.. டிவிஸ்ட் வச்சிட்டாங்க சார்.. இயக்குனர் புலம்ப என்ன காரணம் ?

0 1356

தான் எழுதி இயக்கிய, மழை பிடிக்காத மனிதன் படத்தில் தனக்கே தெரியாமல் 1  நிமிட காட்சிகள் இணைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக படத்தை பிரிவியூ ஷோ பார்த்த இயக்குனர் விஜய் மில்டன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்

விஜய்மில்டன் இயக்கத்தில் விஜய்ஆண்டனி - சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மழைபிடிக்காத மனிதன். இந்த படத்தின் பிரிவியூ காட்சியை செய்தியாளர்களுடன் அமர்ந்து பார்த்த இயக்குனர் விஜய் மில்டன் தன்னுடைய அனுமதி இல்லாமல் படத்தில் ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்

படம் பார்க்க வருபவர்கள் முதல் ஒரு நிமிட காட்சியை மறந்து விட்டு படம் பார்க்கும்படியும் வினோதமான கோரிக்கை ஒன்றையும் விஜய் மில்டன் ரசிகர்களிடம் வைத்துள்ளார்

ஆதங்கத்துடன் இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், படத்தின் புரமோசனுக்காக இயக்குனர் ஸ்டண்ட் அடிக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments