என்னது இந்தியா Unitary state நாடா?.. நீயெல்லாம் ஒரு பேராசிரியரா?.. வறுத்தெடுத்த அமைச்சர் பொன்முடி..!

0 927

சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தில் நடைபெற்ற உலக அரசியல் அமைப்பு நாள் நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி எழுப்பிய கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிக்காத நிலையில், பேராசியர்களிடம் அதே கேள்வியை கேட்டார். அவர்கள் அளித்த பதிலைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், பேராசிரியாக மாறி பாடம் எடுத்தார்.

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழாவில் உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது Unitary state என்றால் என்ன? என்று மாணவர்களை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் மாணவர்கள் யாருமே பதில் கூறாததை அடுத்து, Unitary state என்றால் என்ன என்று கூடவா அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் இன்னும் படிக்கவில்லை? எனக்கேட்டார்.

Unitary state ஆட்சிமுறையில் உள்ள நாடு எது என்று மாணவர்களை நோக்கி அடுத்த கேள்வியை எழுப்பினார். அப்போது மாணவர் ஒருவர் இந்தியா... என்று பதில் கூற என்னது இந்தியா Unitary state நாடா என்று அதிர்ச்சியடைந்தார்.

மாணவர்கள் சொதப்பியதால், அமைச்சர் தனது கேள்விக்கணையை பேராசிரியர்கள் பக்கம் திருப்பினார். மேடையில் அமர்ந்திருந்த தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அரசியல் அறிவியல் பேராசிரியரை நோக்கி அதே கேள்வியை கேட்டார்.

அரசியல் அறிவியல் பேராசிரியர் புதுச்சேரி என்று பதில் அளித்ததால், அமைச்சர் தனது பொறுமையை இழந்தார். முனைவர் பட்டம் பெற்ற முன்னாள் பேராசியரான அமைச்சர் பொன்முடி, தனது கேள்விக்கு விளக்கம் அளித்தார். 

விழா மேடையை வகுப்பறையாக மாற்றி பாடம் எடுத்த அமைச்சர், தமிழகம் முழுவதும் சென்று இது போன்று கேள்வி கேட்டால், மாநிலத்தின் உயர்கல்வியின் தரம் இன்னும் பலமடங்கு உயரும் என்று அங்கிருந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments