சென்னையில் தொழில் வரி 25%-லிருந்து 35%ஆக உயர்வு... தொழில் வரி உயர்வு இப்போது நடைமுறைக்கு வராது என விளக்கம்
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தொழில் வரி 25 சதவிகிதத்தில் இருந்து 35 சதவீதம் வரை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அது தற்போது நடைமுறைக்கு வராது என்றும், அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும் எனவும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகரில் தொழில் நடத்துவோர் மற்றும் வருவாய் ஈட்டிடும் தனிநபர் ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கேற்ப தொழில் வரியினை சென்னை மாநகராட்சிக்குச் செலுத்திட வேண்டும். இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் நிதி வருவாயை பெருக்க தொழில் வரியை உயர்த்த திட்டமிட்டு பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Comments