சென்னை வளசரவாக்கத்தில் போலி சான்றிதழ் மூலம் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் 2 பேர் கைது

0 429

சென்னை வளசரவாக்கத்தில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த போலி மருத்துவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, ரஷ்யாவில் மருத்துவம் படித்த அகஸ்டின், இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் போலி சான்றிதழ் மூலம் சிகிச்சை அளித்துவந்ததும், சித்த மருத்துவரான பரதன்,  போலி சான்றிதழ் மூலம் அலோபதி முறையில் சிகிச்சை அளித்துவந்ததும் தெரியவந்தது.

மருத்துவமனை உரிமையாளரான சரவணனிடம் விசாரணை நடத்திவரும் போலீசார், போலி மருத்துவர்கள் எனத் தெரிந்தே அவர்களை பணியில் அமர்த்தியது தெரியவந்தால் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments