சென்னை ராமாபுரத்தில் ஆண் நண்பரின் வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

0 626

சென்னை ராமாபுரத்தில் ஆண் நண்பரின் வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

அண்மையில் கல்லூரி படிப்பை முடித்த ஸ்ரீஷாவும், துணி வியாபாரம் செய்துவரும் மணிகண்டனும், ஒன்றரை ஆண்டாக, இரு வீட்டாருக்கும் தெரிந்தே நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட மணிகண்டனை, 3 நாட்களாக அவரது வீட்டில் தங்கி ஸ்ரீஷா கவனித்துவந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென ஸ்ரீஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக மணிகண்டன் செல்போனில் தெரிவித்ததாகவும், தனது மகளின் உடலில் தழும்புகள் இருந்ததால் மணிகண்டன் அவரை அடித்தே கொன்றிருக்கலாம் எனவும் ஸ்ரீஷாவின் தாயார் போலீசில் புகாரளித்துள்ளார்.

தலைமறைவானதாக கூறப்படும் மணிகண்டனை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வந்த பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் மனமுடைந்து ஸ்ரீஷா தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர் கூறியதாக தெரிவித்த போலீசார், உடற்கூராய்வுக்கு பிறகே உண்மை தெரியவரும் என்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments