தூக்கிட்டு ரீல்ஸ் எடுத்தாரா? “தம்பி அப்பா செத்து போறேன்.. விபரீதம் எதற்கும் தீர்வு அல்ல..! குழந்தை முன்பு இப்படி செய்யலாமா ?

0 1123

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே செல்போன் கேமராவை ஆன் செய்து வைத்துவிட்டு மகன் முன்பு தூக்கிட்ட லாரி ஓட்டுனர், கழுத்து எலும்பு முறிந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெகதீஷ். இவருக்கு திருமணமாகி 1ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். ஜெகதீஷ் உடன் ஏற்பட்ட தகராறில் இவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது செல்போனில் காமிராவை ஆன் செய்து வைத்து விட்டு, இரவு படுக்கை அறை கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை எழுப்பிய ஜெகதீஷ், அழுது கொண்டே .. “நான் சாகப்போகிறேன்டா” எனக்கூறிவிட்டு மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்

தந்தை ஏதோ விளையாடுகிறார் போல என்று நினைத்த சிறுவன் அவரது மூக்கில் விரலை வைத்து பரிசோதித்தான், உடல் அசைவற்று போனதை கண்டு பயந்து போன சிறுவன் ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தான். இந்த காட்சிகள் அவரது செல்போன் வீடியோவில் பதிவாகி இருந்தது.

தனது மனைவி தன்னிடம் கோபித்துக் கொண்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில் அவரை சமாதானப்படுத்தி அழைத்துவரச் சென்றதாகவும், அவர் வர மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டுக்கு வந்து ஜெகதீஷ் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகின்றது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY