அமெரிக்க அதிபர் தேர்தல் - கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரிப்பு... கமலா ஹாரிஸுக்கு 48%, டிரம்புக்கு 47% ஆதரவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸுக்கு வாக்காளர்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜோ பைடன் விலகியதையடுத்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
டிரம்பும்ம், கமலா ஹாரிஸும் அமெரிக்க முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கமலா ஹாரிஸுக்கு 48 சதவீதமும், டிரம்ப்புக்கு 47 சதவீதமும் ஆதரவு உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, முடிவைத் தீர்மானிக்கக்கூடிய மிச்சிகன், நெவடா, அரிசோனா உள்ளிட்ட ஏழு முக்கிய மாகாணங்களில் டிரம்புக்கு ஈடாக கமலா ஹாரிஸுக்கும் ஆதரவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments