சாலையைக் கடந்த 3 ஆம் வகுப்பு மாணவி கார் மோதி உயிரிழப்பு..

0 484

மதுரை திருமங்கலத்தில் உதவியாளரோடு சாலையைக் கடக்க முயன்ற மூன்றாம் வகுப்பு மாணவி கார் மோதியதில் உயிரிழந்தார்.

முன்னாள் ராணுவ வீரர் அருண்குமார்-மாலதி தம்பதியரின் மகளான சானியா, பள்ளிக்குச் சென்று விட்டு வேனில் வீடு திரும்பிய போது வேன் உதவியாளர் மணிமேகலை மாணவியை அழைத்துக் கொண்டு வேனின் முன்பக்கம் சென்று சாலையை கடக்க முயன்ற போது வேனின் பின்புறம் வந்த பொலிரோ கார் எதிர்பாராத விதமாக இருவரும் மீதும் மோதி முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீதும் கார் மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் சானியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளி உதவியாளர் மணிமேகலை பலத்த காயம் அடைந்தார். இதேபோல் இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவரும் லேசான காயமடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments