10 வயது சிறுமியை கத்தியால் வெட்டிய பட்டதாரி கைது.. உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் போராட்டம் செய்த நிலையில் சிறையிலடைப்பு..!
திருச்செங்கோட்டில் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியால் வெட்டிய ஐ.டி ஊழியர் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட செந்தில்குமார், கடந்த 3 மாதங்களாக குடும்ப தகராறு காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல், வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு அதிகப்படியான சத்தம் கேட்கும்போது மனநிலை பாதிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், அவரது உறவினர்களின் வாரிசுகளுடன் சேர்ந்து வெட்டப்பட்ட சிறுமி ஆன்லைன் கேம் விளையாடியுள்ளர்.
அப்போது, விளையாட்டு மும்முரத்தில் சத்தம் போட்டு விளையாடியதால், கத்தியுடன் வேகமாக வந்த செந்தில்குமார் சோபாவில் அமர்ந்திருந்த சிறுமியை கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், சிறுமியின் உறவினர்களோ, ஏற்கனவே செந்தில்குமார் சிறுமியிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்றதாகவும், அதை சிறுமி வெளியே கூறிவிடுவாள் என்ற நோக்கில் வெட்டியதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments