இந்தியாவில் முதல்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம்.. தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீ தொலைவுக்கு கார் பந்தயப் போட்டி..!
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் ஆகஸ்ட் 30 ம் தேதி முதல் செப்டம்பர் 1 ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர், பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் தீவுத்திடலில் தொடங்கி அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடையும் வகையில் இரவு நேர போட்டியாக நடத்தப்பட இருப்பதாகத் தெரிவித்தனர்.
Comments