டெல்லி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் - போலீசார் அதிரடி நடவடிக்கை

0 346
டெல்லி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் - போலீசார் அதிரடி நடவடிக்கை

டெல்லியில் வெள்ளம் புகுந்து ஐஏஎஸ் பயிற்சி மாணாக்கர் மூன்று மாணவர்கள் உயிரிழந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

கடந்த 27ஆம் தேதி கனமழை பெய்தபோது பழைய ராஜேந்தர் நகரில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய பேஸ்மென்ட்டுக்குள் வெள்ளம் புகுந்ததில் 3 மாணாக்கர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, ஏற்கனவே கட்டட உரிமையாளர் அமர்ஜீத் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்ததுள்ளது. இதற்கிடையே, அந்தப் பகுதிக்கு பொக்லைன்கள் கொண்டு வரப்பட்டு, அனுமதி பெறாத கட்டடப் பகுதிகளை டெல்லி மாநகராட்சி இடித்துள்ளது. மேலும் 13 பயிற்சி மையங்களின் பேஸ்மென்ட்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments