ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின்சொத்துக்களை முடக்கத் திட்டம்

0 381

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 பேரின் சொத்துக்களை முடக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. கைதானவர்களை தனித்தனியாக கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியபோது அதிக அளவிலான பணப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரிய வந்ததால், அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களின்வங்கி கணக்கு பணபரிவர்த்தனைகள், சொத்து பட்டியல்,கொலையில் கிடைத்த பணத்தை எதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்ற முழு விவரங்களையும் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ரவுடிகளின் சொத்துக்கள் மற்றும் அவர்களது பணத்தை முடக்கினால் ரவுடிசம் கட்டுப்படுத்தப்படும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments