செல்ஃபோனில் பேசி வரவழைத்து காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை

0 424

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவரை வெட்டி படுகொலை செய்ததாக ரௌடி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலரான உஷாராணியின் கணவர் ஜாக்சன், சனிக்கிழமை இரவில் வந்த செல்ஃபோன் அழைப்பை அடுத்து அருகிலுள்ள தேவாலயம் அருகே சென்றுள்ளார்.

அங்கிருந்த 6 பேர் கும்பல் ஒன்று ஜாக்சனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

படுகாயம் அடைந்த ஜாக்சன் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments