எனக்கு நீ தாண்டா வேணும்..” போலீஸ்கிட்ட போக்சோ வாங்கினதே போதும்.. போம்மா..” சிறுமியை விரட்ட கையை அறுத்த காதலன்

0 1116

திருப்பூர் அருகே சிறுமியை காதலித்து கடத்தியதாக, போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் ஒருவர், தன்னை காதலித்த சிறுமி மீண்டும் தன்னை தேடி வந்ததால், அவரை விரட்ட ஓடும் பேருந்தில் பிளேடால் கையை அறுத்துக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது 

“எனக்கு நீ தாண்டா வேணும்”.. என்று 17 வயது சிறுமி ஒருவர் அடம் பிடிக்க, நல்லா இருப்ப.. என்ன விட்டுறு என்று இளைஞர் கெஞ்சிப்பார்த்தும், அந்த சிறுமி விடாததால் கையை அறுத்துக்கொண்ட மணிகண்டன் இவர் தான்..!

திருப்பூரில் இருந்து கோவை நோக்கிச்சென்ற அரசு பேருந்து ஒன்று அவிநாசி காவல் நிலையம் முன்பு நின்றது, அதில் இருந்து இறங்கிய நடத்துனர், பேருந்துக்குள் இளம் பெண்ணுடன் அமர்ந்திருந்த இளைஞர் அந்த பெண்ணுடன் சண்டையிட்டுக் கொண்டு தனக்கு தானே கையை பிளேடால் அறுத்துக் கொண்டதாக புகார் தெரிவித்தார்

உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அந்த இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட பேருந்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர், உடன் வந்த பெண் அழுது கொண்டே நின்றார்

போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மணிகண்டன் என்கிற சந்தோஷ் என்பதும் , உடன் அழுது கொண்டிருந்தது அவரது காதலியான 17 வயது சிறுமி என்பதும் தெரியவந்தது.

கோவை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, திருப்பூர் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டில் வசித்து வந்த போது மணிகண்டனுடன் காதல் மலர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் சிறுமியை அழைத்துச் சென்ற மணிகண்டனை மடக்கிய போத்தனூர் அனைத்து மகளிர் போலீசார், மைனர் பெண்ணை கடத்தியதாக கூறி போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இருவரும் காதலிப்பதாக போலீசாரிடம் மணிகண்டன் தெரிவித்த நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியை அவரது சம்மதம் இருந்தாலும் காதலிப்பதும் குற்றம் , அவரை வெளியே அழைத்து செல்வது கடத்தலுக்கு சமம் என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதையடுத்து சில மாதங்கள் சிறையில் இருந்த மணிகண்டன் ஜாமீனில் அண்மையில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி மீண்டும் மணிகண்டனை தேடி அவரது இருப்பிடத்துக்கு சென்றுள்ளது.

இந்த முறை உஷாரான மணிகண்டன், நீ சின்னப்பொண்ணு உன் வீட்டுக்கு போ என்று கூறியுள்ளார், அதனை ஏற்க மறுத்து எனக்கு நீ தாண்டா வேணும் என்று அடம்பிடித்த சிறுமியை ஒருவழியாக சமாதானப்படுத்தி கோவையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார் மணிகண்டன்.

பேருந்தில் செல்லும் போது தான் வீட்டுக்கு செல்ல மாட்டேன் உன்னுடன் தான் இருப்பேன் என்று அந்த சிறுமி மீண்டும் அடம் பிடித்ததால், அவரை பயமுறுத்துவதற்காக , தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கையை தானே அறுத்துக் கொண்டதாக மணிகண்டன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், அந்த சிறுமியை அரசு காப்பகத்துக்கு அனுபி வைத்தனர். அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments