மயிலாடுதுறை மாவட்டம் முன்னாள் கவுன்சிலர் மீது கோயிலுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

0 356

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நேற்று இரவு மாசிலாமணி நாதர் கோவிலுக்குள் வைத்து, பொறையார் ரோட்டரி சங்க தலைவரும், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலருமான அருண்குமார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சித்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நேற்று இரவு 10 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் வழக்கபோல் விளக்கு ஏற்றச் சென்ற போது தீ வைக்கப்பட்டதில் கூச்சலிட்ட அருண்குமாரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டனர். 65 சதவீத தீக்காயத்துடன் அருண்குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஒரு ஆள் மட்டுமே நுழையும் அளவு குறுகிய நுழைவாயில் கொண்ட கர்பகிரகத்திற்குள் நுழைந்து தீவைக்கப்பட்ட சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா? தொழில் போட்டி காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments