தீயை அணைக்க டீ செலவு 27 லட்சம் ரூபாயாங்கோ...! கோவை மாநகராட்சி தாராளம்..! மொத்தமா 76 லட்சம் செலவாச்சாம்..!
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீயை 11 நாட்கள் போராடி அணைக்க 76 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும், டீ காபி உணவு வகைகளுக்கு மட்டும் 27 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக மாநகராட்சி ஒப்புதல் தீர்மான நகலில் குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
வேண்டாம் என்று மக்களால் வெளியே வீசப்பட்ட குப்பைகளை சேகரித்து மொத்தமாக கொட்டி வைக்கும் கிடங்கு தீப்பற்றிக் கொண்டதால் 76 லட்சம் செலவு செய்து அந்த தீயை அணைத்ததாக செலவு கணக்கு காட்டியுள்ள கோவை மாநகராட்சியின் மாமன்றம் இது தான்..!
கோவை மாநகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் துணை மேயர் வெற்றி செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 333 தீரமானங்கள் கொண்டுவரபட்டது.
அதில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 6ந்தேதி முதல் 17ந்தேதி வரை கட்டுகடங்காமல் பற்றி எரிந்த தீயை அணைப்பதற்கான 11 நாட்கள் செலவு கணக்குகள் மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது.
தீயை அணைப்பதற்கு மொத்தமாக 76 லட்சத்து 70 ஆயிரத்து 318 ரூபாய் செலவிடப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் உணவு , டீ ,காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்ககள் வாங்கியதற்கு மட்டும் 27 லட்சத்து 51ஆயிரத்து 678 ரூபாய் கணக்கு காட்டப்பட்ட்டிருந்தது. இதனை அதிமுக கவுன்சிலர்கள் கடுமையாக விமர்சித்தனர்
அது போல வீடு கட்டும் திட்டத்திற்கான அனுமதியை ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்து திட்ட அனுமதி கட்டணத்தை அளவுக்கதிகமாக உயர்த்தி ஏழை எளியமக்கள் வீடு கட்ட இயலாத நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்
Comments