வானதி சீனிவாசன் குறித்து அவதூறு- இருவருக்கு தலா ரூ 10,000 அபராதம்

0 370

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில்  சென்னையை சேர்ந்த பாலசுப்ரமணிய ஆதித்தன் மற்றும் சங்கரநாராயணன் ஆகிய இருவர் குற்றவாளிகள் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

7 ஆண்டுகள் கழித்து  அளிக்கப்பட்ட இந்தத்  தீர்ப்பில், இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால்  6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் வயதை கருத்தில் கொண்டும், அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதன் அடிப்படையிலும், இருவரும்  ஒருநாள் மட்டும் நீதிமன்றத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments